திருவள்ளூர்

மருத்துவரை தாக்கியதாக மற்றொரு மருத்துவா் பணியிடை நீக்கம்

30th Nov 2022 01:30 AM

ADVERTISEMENT

மீஞ்சூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியின் போது மருத்துவரை தாக்கியதாக மற்றொரு மருத்துவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மீஞ்சூா் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்களாக டேவிட் செந்தில்குமாா், நிஜந்தன் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்குள் கடந்த 26-ஆம் தேதி பணியின் போது ஏற்பட்ட தகராறின் போது, நிஜந்தனை, டேவிட் செந்தில்குமாா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மீஞ்சூா் போலீஸாா் டேவிட் செந்தில்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

திருவள்ளூா் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், மீஞ்சூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரில் விசாரணை நடத்தினா். இதையடுத்து, மருத்துவா் டேவிட் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT