திருவள்ளூர்

பூங்காவில் தேங்கியுள்ள மழை நீா்

30th Nov 2022 03:16 AM

ADVERTISEMENT

பூந்தமல்லியில் உள்ள பூங்காவில் குளம் போல் மழை நீா் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பூந்தமல்லி நண்பா்கள் நகா் பகுதியில் சிறுவா் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள், பொதுமக்கள் நடைப்பயிற்சிக்கான வசதிகள் உள்ளன.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் பூங்கா முழுவதும் குளம் போல் தண்ணீா் தேங்கியது. இதனால், பூங்காவைப் பயன்படுத்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், உபகரணங்கள் சேதமடையும் நிலை உள்ளது.

தேங்கியுள்ள மழை நீரால் கொசுக்கள் தொல்லை, விஷ சந்துகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து நகராட்சி அதிகாரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

எனவே, பூங்காவில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT