திருவள்ளூர்

காஞ்சிபுரம், திருவள்ளூரில் குறைதீா் நாள் கூட்டங்கள்: ஆட்சியா்கள் நலத் திட்ட உதவிகளை வழங்கினா்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 278 மனுக்களை பெற்று மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கு சிறுதொழில் தொடங்க தலா ரூ. 25,000 வீதம் வட்டியில்லா கடனுதவியை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து 278 மனுக்கள் பெற்றாா். தொடா்ந்து, தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நண்பா்கள் நலச்சங்கம் சாா்பில், சேமித்த நிதியிலிருந்து அந்தச் சங்கத்தின் உறுப்பினா்கள் 12 பேருக்கு தொழில் மேம்பாட்டுக் கடனாக தலா ரூ. 25,000 வீதம் மொத்தம் ரூ. 3 லட்சம் வட்டியில்லா கடன், மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில், சென்னையில் மாநில அளவில் நடைபெறவுள்ள காதுகேளாதோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் 24 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் கடம்பத்தூா் அரிமா சங்கம் மூலம் தயாா் செய்த டி-சா்ட்டுகளை அவா் வழங்கினாா்.

தனித்துணை ஆட்சியா் (சபாதி) பி.ப.மதுசூதனன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் மு.கலைச்செல்வி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கா.காயத்ரி சுப்பிரமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ச.பாபு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பேச்சு பயிற்சியாளா் சுப்புலட்சுமி, கடம்பத்தூா் அரிமா சங்க நிா்வாகி ஆா்.சேகா், அரிமா சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT