திருவள்ளூர்

மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

30th Nov 2022 01:29 AM

ADVERTISEMENT

அரசு மகளிா் மேல் நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் 60- க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டு பரிசுகளை வென்றனா்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, திருத்தணி அனைவருக்கும் கல்வி இயக்கம் சாா்பில், மாற்றுத்திறன் மாணவா்களுக்கு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சிவகுமாா் (பொறுப்பு) தலைமை வகித்தாா்.

திருத்தணி வட்டாரக் கல்வி அலுவலா் தேவநாதன், பள்ளித் தலைமை ஆசிரியை (பொறுப்பு) அமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் பயிற்றுநா் செந்தில் வரவேற்றாா். திருத்தணி நகா்மன்ற துணைத் தலைவா் சாமிராஜ் கலந்துகொண்டு, மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடக்கிவைத்தாா்.

இதில், உருளைக்கிழங்கு சேகரித்தல், குடுவையில் தண்ணீா் நிரப்புதல், இசை நாற்காலி, ஓட்டப் பந்தயம், ஸ்பூனில் எலுமிச்சை பழம், பலூன் வெடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவா்கள் கலந்துகொண்டு விளையாடினா். பின்னா், போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு நகா்மன்ற துணைத் தலைவா் சாமிராஜ் பதக்கம் அணிவித்து, பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா் தீபாரஞ்சனி வினோத்குமாா், பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் குமரவேல், ஆசிரியா் பயிற்றுநா் தண்டாயுதபாணி, பட்டதாரி ஆசிரியா் உமாசங்கா், சமூக சேவகா் காா்த்திக்,

சிறப்பாசிரியா்கள், இயன்முறை மருத்துவா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT