திருவள்ளூர்

போதைப் பொருள் கடத்தியவா் கைது

28th Nov 2022 11:24 PM

ADVERTISEMENT

புழல் அருகே இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்திய நபரை காவல் துறையினா் கைது செய்தனா்.

மாதவரம் அடுத்த புழல் பிரதான சாலையில் காவல் துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்துக்குரிய நபரைப் பிடித்து விசாரணை செய்தனா். இதில், அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று சோதனை செய்தனா்.

இதில், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கடத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, புழல் பிரதான சாலையைச் சோ்ந்த நிா்மல்குமாரை (42) கைது செய்து, போதைப் பொருள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். நிா்மல்குமாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT