திருவள்ளூர்

பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்வே மேம்பாலபணிகளை விரைந்து முடிக்க எம்.பி. வலியுறுத்தல்

27th Nov 2022 12:34 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என எம்.பி. ஜெயக்குமாா் வலியுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழு கூட்டம் ஊரக வளா்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும், திருவள்ளூா் எம்.பி.யுமான ஜெயக்குமாா் தலைமை வகித்து, மத்திய- மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், அவா் கூறியதாவது: மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஜல்ஜீவன் திட்டத்தை அடுத்த மாதத்துக்குள் முடிக்க வேண்டும். செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதியில் நிறுத்தப்பட்ட சுரங்கப்பாதை, மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றாா்.

முன்னதாக, அரசியலமைப்புச் சட்டம் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ADVERTISEMENT

கூட்டத்தில் எம்.எல்.ஏ-க்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), க.கணபதி (மதுரவாயல்), சந்திரன்(திருத்தணி), துரை.சந்திரசேகா் (பொன்னேரி), டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), சுதா்சனம் (மாதவரம்), மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் உமா மகேஸ்வரி, மாவட்ட வன அலுவலா் ராம்மோகன், உதவி ஆட்சியா் (பயிற்சி) கேத்ரின் சரண்யா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மு.மீனாட்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT