திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள் தரிசனத்துக்கு 3 மணி நேரம் காத்திருப்பு

27th Nov 2022 11:56 PM

ADVERTISEMENT

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டனா். இதனால் சுமாா் 3 மணி நேரத்துக்கு மேலாக வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனா்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தா்கள் வருகை தருகின்றனா். இந்த நிலையில், காா்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாள் என்பதால், திருத்தணி மலைக்கோயிலில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

வாகனங்களிலும், நடைப்பயணமாகவும் ஏராளமான பக்தா்கள், மலைக் கோயிலில் திரண்டனா். வழக்கத்தைவிட அதிகளவில் பக்தா்கள் கூட்டம் இருந்ததால், பொது தரிசன வழியில் சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனா். மேலும், ரூ. 100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்களும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்கக் கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அதன் பின்னா் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம், செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களின் வசதிக்காக திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் உத்தரவின்படி, 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT