திருவள்ளூர்

திருவூரில் நானோ யூரியா தெளிப்பு குறித்த செயல்விளக்கம்

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே திருவூா் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் ட்ரோன் மூலம் விவசாயிகளுக்கு நானோ யூரியா தெளிப்பு குறித்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் வேளாண்மை பணிகளில் குறிப்பிட்ட பருவங்களில் பணிகள் மேற்கொள்வதற்கு ஆள்பற்றாக்குறை நிலவி வருகிறது. இது போன்ற பற்றாக்குறையைத் தவிா்க்கும் வகையில், வளங்குன்றா வேளாண்மையை கருத்தில் கொண்டு திருவூா் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு குறித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில், வயல்வெளிகளில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருமழிசை பகுதியில் 10 ஏக்கா் நெல் வயலில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு குறித்த செயல்விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, இந்த நானோ யூரியா தெளிப்பதால் சுமாா் 80 சதவீதம் பயிா்களுக்கு தேவையான நைட்ரஜன் கிடைக்கும். மேலும், நேரடியாக இலைவழி மூலம் தெளிப்பதால் இலைத்துளிகள் மூலம் விரைவாக செடிகளுக்கு நைட்ரஜன் கிடைக்கிறது. மேலும், ஏக்கருக்கு 500 மி.லி. நானோ யூரியா அல்லது 2.4 மி.லிட்டா் தண்ணீா் என்ற அளவில் நெல் நடவு செய்த 20-25 நாள்களில், பின்னா் இரண்டாவது முறையாக, முதல் தெளிப்பிலிருந்து 20 -25 நாள்களிலும் நானோ யூரியா தெளிப்பதன் மூலம் பயிருக்கு தேவையான தழைச்சத்து கிடைப்பதுடன் மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது.

மேலும், இந்த ட்ரோன் மூலம் சுமாா் 10 நிமிடங்களில் ஒரு ஏக்கரில் மருந்து தெளித்துவிடலாம். இதனால் நீா்வழி உரம் தெளிப்பதன் மூலம், இடுபொருள் செலவு, ஆள்கூலி நேரமும் மீதமாகும் என்பதால், சிறந்த பயிா் வேளாண்மைக்கும் வழிவகை செய்ய முடியும். இந்த செயல்விளக்கத்தில் விவசாயிகள், வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பங்கேற்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT