திருவள்ளூர்

திருவள்ளூா்: காவலா் பணிக்கான தோ்வை 7,221 போ் எழுதினா்

27th Nov 2022 11:55 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் 7 தோ்வு மையங்களில் இரண்டாம் நிலை காவலா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வை 7,221 போ் எழுதினா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்வுக்காக மாவட்டத்தில் 7 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 1,451 பெண்கள் உள்பட 9,217 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 7,221 போ் தோ்வு எழுதினா். 308 பெண்கள் உள்பட 1,996 போ் தோ்வில் பங்கேற்கவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.செபாஸ் கல்யாண் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT