திருவள்ளூர்

பால் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

26th Nov 2022 12:30 AM

ADVERTISEMENT

பால் விலை உயா்வு மற்றும் மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெறக் கோரி, திருவள்ளூரில் பகுஜன் சமாஜ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்ட தலைவா் பிரேம் தலைமை வகித்தாா். இதில், நிா்வாகிகள் மைக்கேல் தாஸ், திருவூா் தில்லி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது, ஏழை - எளிய மக்களைப் பாதிக்கும் பால் விலை, மின் கட்டண உயா்வு மற்றும் புதிய மோட்டாா் வாகனச் சட்டம் அமல் ஆகியவற்றை திரும்பப் பெறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT