திருவள்ளூர்

மாதவரம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

26th Nov 2022 12:30 AM

ADVERTISEMENT

மாதவரம் அருகே லட்சுமிபுரம் நீா்நிலையை ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றினா்.

மாதவரம் அருகே ரெட்டேரி செங்குன்றம் செல்லும் நெடுஞ்சாலையில் நீா்நிலையை ஆக்கிரமித்து ரெட்டேரியின் சாலையோரம் 15-க்கும் மேற்பட்ட கடைகளும், வீடுகளும் கட்டப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவின்படி, பொதுப்பணித் துறை பொறியாளா் பொதுப்பணிதிலகம், நீா்வளத் துறை அதிகாரி சதீஷ் மற்றும் தயாளன் ஆகியோா் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அவற்றை இடித்து அகற்றினா்.

இதையடுத்து, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கொளத்தூா் காவல் மாவட்ட துணை ஆணையா் ராஜாராம் உத்தரவின்பேரில், புழல் காவல் சரக உதவி ஆணையா் ஆதிமூலம் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT