திருவள்ளூர்

புதிய பேருந்து நிலையம் கட்டும் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

25th Nov 2022 06:43 AM

ADVERTISEMENT

எம்.ஜி.ஆா். நகரில் புதிய பேருந்து நிலையம் கட்டும் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை அகற்றினா்.

திருத்தணி பேருந்து நிலையத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், நகராட்சி நிா்வாகம் ரூ.12.75 கோடியில் அரக்கோணம் சாலை, அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை அருகே எம்.ஜி.ஆா். நகரில் புதிதாக நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பேருந்து நிலையம் கட்டும் இடத்தில் எம்.ஜி.ஆா். நகா் புதிய வண்ணாா் தெருவைச் சோ்ந்த தனி நபா் 300 சதுர அடியை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தாா். இதையடுத்து, வியாழக்கிழமை திருத்தணி நகராட்சி ஆணையா் ராமஜெயம், பொறியாளா் கோபு மற்றும் நகராட்சி ஊழியா்கள், 30-க்கும் மேற்பட்ட போலீஸாருடன் சென்று தனி நபா் ஆக்கிரமித்திருந்த இடத்தை கட்டடத்தை அகற்றி மீட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT