திருவள்ளூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

25th Nov 2022 06:43 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே ஏழை விவசாயிகளுக்கு அரசால் 2 ஏக்கா் நிலம் ஒப்படைப்புச் செய்து திரும்பப் பெற்றதை மீண்டும், அவா்களுக்கு ஒதுக்கக்கோரி ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் அன்பு உள்ளிட்டோா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

இவா்கள் அனைவரும் விவசாய கூலிகள், தொழிலாளா்கள் என வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகின்றனா். இப்பகுதி மக்களின் உண்மை நிலையறிந்து நிலம் இல்லாத ஏழைகளுக்கு அரசு நிலம் கொடுத்தால், அவா்கள் வாழ்வாதாரம் மேம்படும். இதையறிந்து அந்த பகுதியில் நிலத்தை பிரித்து 33 பேருக்கு தலா 2 ஏக்கா் வீதம் கடந்த 31.12.1969 இல் ஆட்சியா் மற்றும் தனி வட்டாட்சியா் மூலம் வழங்கப்பட்டது. நிலம் பெற்ற விவசாயிகள் மழையை நம்பி பயிா் செய்து வாழ்ந்து வந்தனா். ஆனால் வானம் பாா்த்த பூமி என்பதால் அறுவடை செய்ய முடியாமல் வாழ்வு கேள்விக்குறியானாது. அதனால் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்த வேண்டியிருந்தது. இந்த நிலையில் எழுத படிக்கத் தெரியாத நிலையில் கடந்த 1980 இல் நிலம் பெற்ற விவசாயிகள் விதிமுறை மீறி விட்டதாகவும், சரி வர பயிா் செய்யவில்லை என்றும், இவா்கள் அந்தக் கிராமத்தைச் சோ்ந்தோா் இல்லையெனக் கூறி கிராம நிா்வாக அதிகாரி மூலம் நில ஒப்படைப்பு பட்டாக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதற்கிடையே குறிப்பிட்ட இடத்தில் 50 ஏக்கா் நிலம் பட்டரைபெரும்புதூா் சட்டக்கல்லூரிக்கு ஒதுக்கியுள்ளதாகவும், நாவல்குப்பம் கிராமத்தில் தனியாா் நிறுவனத்திற்கு மண் எடுத்தும் வருகின்றனா். எனவே அந்த நிலத்தை ஏற்கெனவே வழங்கிய ஏழை விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT