திருவள்ளூர்

மாபெரும் இலவச மருத்துவ முகாம்

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

செங்குன்றம் பகுதியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், பிரசாந்த் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, எம்.என். கண் மருத்துவமனை, எழில் டயாபட்டிக் சென்டா் இணைந்து மாபெரும் இலவச இருதய பரிசோதனை, பொது மருத்துவம், கண் பரிசோதனை முகாம் செங்குன்றம் வ.உ.சி. தெருவில் உள்ள மதரஸா மஸ்ஜீதே அபுபக்கா் வளாகத்தில் அப்துல் மாலிக் தலைமையில் நடைபெற்றது.

வட்டாரத் தலைவா்கள் முகமது அபுபக்கா், சண்முக சுந்தரம், முகமது கபூா் ஆகியோா் தலைமை வகித்தனா். முகாமுக்கு மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முகாமைத் தொடங்கி வைத்தாா்.

இதில் செங்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT