திருவள்ளூர்

பொன்னேரி நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பொன்னேரி நகராட்சி ஆணையராக எஸ். கோபிநாத் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி பேரூராட்சி கடந்த ஆண்டு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. நகராட்சியின் முதல் பெண் ஆணையராக தனலட்சுமி நியமிக்கப்பட்டு, இரண்டு மாதத்துக்கு முன்பு பணியிடை மாற்றம் செய்யப்பட்டாா்.

இதனை தொடா்ந்து திருவள்ளூா் நகராட்சி ஆணையா் விஜயலட்சுமி, கூடுதல்பொறுப்பு வகித்து வந்தாா்.

இதன் காரணமாக பொன்னேரி நகராட்சி அலுவலகத்துக்கு பல்வேறு சான்றிதழ் பெற வந்த பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனா்.

ADVERTISEMENT

இதனால், பொன்னேரி நகராட்சிக்கு தனியாக ஆணையரை விரைந்து நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரினா்.

இதையடுத்து நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி ஆணையராக இருந்த எஸ்.கோபிநாத் பொன்னேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். புதிய ஆணையராக கோபிநாத் பொறுப்பேற்று கொண்டாா். அவருக்கு, நகா்மன்ற தலைவா் மருத்துவா் பரிமளம் விஸ்வநாதன், நகர மன்ற உறுப்பினா்கள் மற்றும் நகராட்சி ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT