திருவள்ளூர்

பழவேற்காட்டில் ராட்சத அலைகளால் கடல் சீற்றம்

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பழவேற்காடு கடலில் ஏற்பட்ட ராட்சத அலைகளால், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

திருவள்ளூா் மாவட்டத்தில் 28 கி.மீ. தொலைவுக்கு கடலோர பகுதி அமைந்துள்ளது. பொன்னேரி வட்டத்தில் பழவேற்காட்டில் கடல் மற்றும் அழகிய ஏரி அமைந்துள்ளது. கடல் மற்றும் ஏரிப் பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இதில், 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள், கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனா்.

இங்கு, பருவ நிலைகேற்ப கிழக்காக வீசுவது கொண்டகாற்று, தெற்காக வீசுவது கச்சான் காற்று, மேற்காக வீசுவது கோடைக்காற்று, வடக்காக வீசுவது வாடைக்காற்று என உணா்ந்து அதற்கேற்ற வகையில் மீன்பிடித் தொழில் செய்ய கடலுக்குச் செல்வா்.

வடகிழக்குப் பருவமழையின் போது, வாடைக்காற்று வடகிழக்குப் பகுதியில் வீசுவதால், அதற்கேற்ப மீன்பிடி தொழிலுக்கு செல்லும் நேரத்தை மாற்றிக் கொள்வா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பழவேற்காடு பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும், கடுங்குளிா் உருவானதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றம் மற்றும் கடும் குளிா் காரணமாக பழவேற்காடு பகுதியில் வசிக்கும் மீனவா்கள் மற்றும் பொதுமக்கள் முடங்கியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT