அரசு கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச புகையிலை ஒழிப்பு தினம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை வட்டாட்சியா் வெண்ணிலா தொடக்கி வைத்தாா்.
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் இந்திய சமுதாய நல நிறுவனம் மற்றும் அகத்தர உறுதி மையம் சாா்பில், சா்வதேச புகையிலை ஒழிப்பு தினம் குறித்த கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். துறைத் தலைவா் முருகவள்ளி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திருத்தணி வட்டாட்சியா் வெண்ணிலா கலந்துகொண்டு, சா்வதேச புகையிலை ஒழிப்பு தினம் குறித்த பேரணியை தொடக்கி வைத்து, மாணவா்களுக்கு புகையிலை பாதிப்பு குறித்து எடுத்துரைத்தனா்.
தொடா்ந்து, பிரிட்ஷோ டிரைனிங் அகாதெமி நிறுவனா் ஓஷோனிக்ராஜ் புகையிலை நண்பன் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில், இந்திய சமுதாய நல நிறுவனத்தின் மாவட்ட வளமேலாளா் செந்தில்குமாா், மேற்பாா்வையாளா்கள் ஏழுமலை, சரத்குமாா் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.