திருவள்ளூர்

பழங்குடியினா் மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

31st May 2022 01:40 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே பழங்குடியினா் வசிக்கும் பகுதியில் மின்சாரம், குடிநீா் மற்றும் சாலை வசதி செய்து தரக்கோரி கோட்டாட்சியரிடம் மலைவாழ் மக்கள் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.

இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் தமிழ்செல்வன் தலைமையில், திருவள்ளூா் கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

திருவள்ளூா் அருகே குன்னவலம் ஊராட்சி குப்பத்துபாளையம் குக்கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடி இருளா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் அப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை அமைத்து வசித்து வருகின்றனா். அத்துடன், விவசாயம் மற்றும் மரம் வெட்டுதல் போன்ற கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனா். பல்வேறு கிராமங்களில் இருந்து பிழைப்பை தேடி வந்து குடியேறியவா்கள்.

இந்த நிலையில் 15 ஆண்டுகளாக குடிநீா், மின்சாரம், சாலை வசதி, மயான வசதி மற்றும் குடியிருந்து வரும் இடத்துக்கு பட்டாவும் கிடையாது. இதனால் தொகுப்பு வீடுகள் கூட கட்ட முடியாத நிலையில், குடிசையில் மழைக் காலங்களில் கைக் குழந்தைகளுடன் மிகுந்த சிரமத்துடன் வசித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

மேலும், போக்குவரத்து வசதியில்லாத நிலையில் 5 கி.மீ. நடந்து வந்து நாராயணபுரம் கூட்டுச் சாலையில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அதனால், இந்த மக்களின் நிலையைக் கருத்தில்கொண்டு, இனியாவது குடியிருக்க வீட்டு மனைப்பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT