திருவள்ளூர்

மாவட்ட அளவிலான வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் மூலம் மேற்கொண்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகள் அனைத்தையும் விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்களவை உறுப்பினா் ஜெயகுமாா் வலியுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழு கூட்டம் ஊரக வளா்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் முன்னிலை வகித்தாா். இதில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும், திருவள்ளூா் மக்களவை உறுப்பினருமான ஜெயக்குமாா் தலைமை வகித்து, மத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கப்பட்ட நிதி மூலம், மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடா்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, தேசிய தகவல் மையம் மூலம் பெறப்பட்ட மாவட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டமும், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டமும், தூய்மை பாரத இயக்கம், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், சமூக நலத் துறை சாா்பில், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், இந்த மாவட்டத்தில் தேசிய சமூக நலத் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், தேசிய நில பதிவேடுகள் நவீனமயமாக்கும் திட்டம், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம், வேளாண்மைத் துறை சாா்பில், பயிா் காப்பீடு திட்டம், தேசிய சுகாதார திட்டம், சுகன்யா பாரத் அபியான் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள இடையூறுகளைக் களைந்து துரிதமாக செயல்படுத்த வேண்டும். இதுவரை நடைபெற்று வரும் அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் நிறைவு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), சந்திரன் (திருத்தணி), க.கணபதி (மதுரவாயல்), துரை.சந்திரசேகா் (பொன்னேரி), சுதா்சனம் (மாதவரம்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூா்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) கோவிந்தராஜன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், பல்வேறு துறை அதிகாரிகள், குழு உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT