திருவள்ளூர்

திருவள்ளூர் நிதி நிறுவனங்களில் வணிக குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை

24th May 2022 01:31 PM

ADVERTISEMENT

திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் நிதி  நிறுவனங்களில் சென்னை வணிக குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் செயல்படும் தனியார் வணிக நிறுவனங்களின் மீது வாடிக்கையாளர்கள் தொடுத்த புகாரைத் தொடர்ந்து வணிக குற்றப்பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

அந்த வகையில் திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் வணிக காவல்துறையினர் 6  பேர் கொண்ட குழுவினர் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர் .

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் செயல்படும்  தனியார் நிதி நிறுவனங்களில் வாடிக்கையாளரைக் கவரும் வகையில் ஒரு நபர் சுமார் ரூ.1 லட்சம் தொகையை டெபாசிட் செய்தால் மாதம் 30 ஆயிரம் தரப்படும் என பல சலுகையை அறிவித்துள்ளனர். இந்த சலுகையால் ஈர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

மக்களை கவரும் வகையில் அதிரடி கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் மீது  தொடுக்கப்பட்ட் புகாரைத் தொடர்ந்து சென்னை வணிக குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

இதேபோல் சென்னை, அமைந்தகரை, முகப்பேர், அண்ணாநகர், திருவள்ளூர் உள்ளிட்ட  இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடி  சோதனை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT