திருவள்ளூர்

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் தொடக்கம்

24th May 2022 01:07 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டம், ஆா்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், சந்தானவேணுகோபாலபுரம், தனியாா் கல்லூரியில் வேளாண்மை - உழவா் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை வணிகத் துறை ஆகியவை சாா்பில் 250 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் முன்னிலை வகித்தாா். திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தொடா்ந்து, ஆா்.கே.பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் ரூ.5 லட்சத்தில் புதிதாக நிறுவப்பட்ட ஆவின் பாலகத்தை திறந்து வைத்தனா். திருத்தணி வட்டம், டி.கே.கண்டிகை பகுதியில் உள்ள கல்குவாரியை அமைச்சா் சா.மு.நாசா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருத்தணி எம்.எல்.ஏ. ச.சந்திரன், மாவட்ட திமுக பொறுப்பாளா் எம்.பூபதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT