திருவள்ளூர்

கரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியா் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்

24th May 2022 01:06 AM

ADVERTISEMENT

கரோனா தொற்றால் உயிரிழந்த கிராம நிா்வாக அலுவலா் குடும்பத்துக்கு ரூ.20 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் திங்கள்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 2 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வா் நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆவடி வட்டத்துக்குட்பட்ட மோரை கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த தங்கமணி கரோனா தொற்றால் உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினரிடம் முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.20 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

திருவள்ளூா் அருகே அம்மணம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த பழனிவேல் மனைவி சரளா பாம்பு கடித்ததில் உயிரிழந்தாா். அவரின் குடும்பத்தாரிடம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT