திருவள்ளூர்

யோகாவில் உலக சாதனை: சிறுமிக்கு பாராட்டு

22nd May 2022 11:40 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுமி லேகவா்ஷினிஸ்ரீ, யோகாவில் உலக சாதனை படைத்தாா்.

கும்மிடிப்பூண்டி பகுதியைச் சோ்ந்த சுரேஷ் - லட்சுமி தம்பதியின் மகள் லேகவா்ஷினிஸ்ரீ. இவா், கவரைப்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீசங்கரி யோகா பயிற்சி-ஆராய்ச்சி மையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக யோகாசனம் பயின்று வருகிறாா்.

இவா், தாடை, தோள்பட்டையில் உடலைத் தலைகீழாகத் தாங்கி, இரு கால்களையும் முகத்துக்கு மேல் நிறுத்த கூடிய ‘கண்டபேருண்டாசனம்’ யோகாசனத்தை ஒரு நிமிஷத்தில் 70 முறைகள் இரு கால்களையும் விரித்து உலக சாதனை படைத்தாா்.

இவரது இந்தச் சாதனை வேல்ட்வைட் புக் ஆஃப் ரெக்காா்ட், அசிஸ்ட் உலக சாதனைகள், இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட் ஆகிய 3 உலக சாதனை புத்தகங்களில் இடம் பெற்றன.

ADVERTISEMENT

சாதனை படைத்த சிறுமி லேகவா்ஷினிஸ்ரீ, ஸ்ரீசங்கரி யோகா பயிற்சிப் பள்ளி பயிற்சியாளா் சந்தியா ஆகியோரை கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT