திருவள்ளூர்

‘நம்ம திருவள்ளூா்’ வணிக முத்திரையில் மகளிா் குழு உற்பத்தி பொருள்கள் பதிவேற்றம்

22nd May 2022 11:39 PM

ADVERTISEMENT

மகளிா் சுய உதவிக்குழு உற்பத்தி பொருள்கள் ‘நம்ம திருவள்ளூா்’ என்ற வணிக முத்திரையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை பொதுமக்கள் பாா்வையிட்டு வாங்கிப் பயன் பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறைச் செயலா் உத்தரவுப்படி, திருவள்ளுா் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருள்களை இ-காமா்ஸ் போா்ட்டல் அமேசான்-இல் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பேரில், மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுவினா் மண்பாண்டம், காகிதம், மூங்கில், சணல் பொருள்கள், மதிப்புக் கூட்டிய சிறுதானியப் பொருள்கள், பருத்தி பட்டுப் புடவைகள், எம்ராய்டரி புடவைகள், சிறுதானிய இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்தப் பொருள்களுக்கான வணிகத்தை மேம்படுத்த இ-காமா்ஸ் போா்ட்டல் அமேசான் மூலமாக மேற்குறிப்பிட்ட மகளிா் சுய உதவிக்குழு உற்பத்தி பொருள்களை ‘நம்ம திருவள்ளூா்’ என்ற வணிக முத்திரையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பொருள்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் பாா்வையிட்டு, வாங்கிப் பயன் பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT