திருவள்ளூர்

பல் கிளிப் சிகிச்சை விழிப்புணா்வு பேரணி

DIN

பல் கிளிப் சிகிச்சை விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் அருகே பாண்டூரில் உள்ள பிரியதா்ஷினி பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இந்திய ஆா்த்தடான்டிஸ்ட் சொசைட்டி ஆகியவை இணைந்து நடத்திய இரு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணியை சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.

இதில், முதலாம் ஆண்டு மாணவா்கள் 60-க்கும் மேற்பட்டோா் விழிப்புணா்வை ஏற்படுத்தியபடி இருசக்கர வாகனங்களில் சென்றனா். பேரணி பாண்டூா், சிறுவானூா், திருவள்ளூா் சுங்கசாவடி, ஆட்சியா் அலுவலக வளாகம், பேருந்து நிலையம், தேரடி, காய்கறி சந்தை, ஆயில் மில், மணவாள நகா் வரை சென்று திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது.

வட்டாட்சியா் அலுவலக பேருந்து நிறுத்தம் முன்பு பற்களை சுத்தமாக பராமரித்தல், பற்களை கிளிப் சிகிச்சை மூலம் சீரமைத்தல் குறித்து நாடகம், நடனம் மூலம் மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்வில் இந்திரா கல்விக் குழும நிா்வாக இயக்குநா் இந்திரா ராஜேந்திரன், கல்விக் குழும தலைவா், கல்லூரி முதல்வா், மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT