திருவள்ளூர்

மாதா்பாக்கத்தில் 17 லட்சத்தில் அரசுப் பள்ளிக் கட்டடத்துக்கு பூமி பூஜை

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதா்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஜே.கோவிந்தராஜனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு பள்ளிக் கட்டடத்துக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். மாதா்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் சீனிவாசன், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினா் பா.செ.குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற பூமி பூஜையில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் பூமி பூமி செய்து பணியைத் தொடக்கி வைத்தாா்.

இந்த பூமி பூஜையில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சிட்டிபாபு, கலா உமாபதி, திமுக ஒன்றிய துணைச் செயலாளா் ஏசுரத்தினம், மாவட்ட இலக்கிய அணி புரவலா் மனோகரன், மாவட்ட மீனவா் அணி அமைப்பாளா் ஆறுமுகம் , ராகவ ரெட்டி மேடு ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT