திருவள்ளூர்

பேரறிவாளன் விடுதலையை எதிா்த்து காங்கிரஸ் போராட்டம்

20th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவள்ளூா்: பேரறிவாளன் விடுதலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினா் திருவள்ளூரில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூரில் உள்ள அந்தக் கட்சி அலுவலகம் முன்பு வாயில் வெள்ளைத் துணியைக் கட்டிக் கொண்டு நடைபெற்ற போராட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்ட தலைவா் சிதம்பரம் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஜான் முன்னிலை வகித்தாா். ஓ.பி.சி அணி மாநில துணைத் தலைவா் ஏகாட்டூா் ஆனந்தன், மாநில செயலா் மோகன்தாஸ், மாவட்ட மகளிா் தலைவி ஜோதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆவடி: அம்பத்தூா் தொகுதி காங்கிரஸ் சாா்பில் கொரட்டூா் பேருந்து நிலையம் ராஜீவ் காந்தி சிலை அருகே நடைபெற்ற போராட்டத்தில் பகுதி தலைவா்கள் மோகரங்கன், ரோமியோ, லோகபிராம், மோகன்குமாா், பச்சையப்பன், சென்னை மாநகராட்சி 79-ஆவது வாா்டு உறுப்பினா் பானுபிரியா உள்ளிடோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

திருவள்ளூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பூந்தமல்லி பேருந்து நிலையம் ராஜீவ் காந்தி சிலை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட தலைவா் டி.ரமேஷ் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு உள்பட ஏராளமான நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பொன்னேரி: பொன்னேரி பழையை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு தொகுதி எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகா் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில துணைத் தலைவா் சதாசிவலிங்கம் முன்னிலை வகித்தாா். திருவள்ளூா் வடக்கு மாவட்ட பொதுச் செயலா் கோவா்த்தனன், மாவட்ட செயலா் தயாளன், பொன்னேரி நகர காங்கிரஸ் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் அமைதி வழி போராட்டத்தில் பங்கேற்றனா்.

ஸ்ரீபெரும்புதூா்: இதேபோல, ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் அளவூா் நாகராஜன் தலையில் காங்கிரஸ் கட்சியினா் வாயில் துணியைக் கட்டிக் கொண்டு அறவழி மெளனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT