திருவள்ளூர்

பழங்குடியினா் குடியிருப்புப் பகுதியில் தடுப்புச் சுவா்

20th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே பழங்குடியினா் வசித்து வரும் பகுதியில் தனி நபா் தடுப்புச் சுவா் கட்டி வருவதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினா்.

திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த பழங்குடியினா் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனா். இந்தக் குடியிருப்புக்கு அருகே தனியாா் திருமண மண்டபம் உள்ளது. அந்த வழியாக பழங்குடியின மக்களின் குழந்தைகள் பள்ளிக்கும், பலா் வேலைக்குச் செல்லவும் பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில், அந்த வழியாக பழங்குடியினரை நடமாடவிடாமல் தடுக்கும் வகையில் திருமண மண்டப உரிமையாளா் தடுப்புச் சுவா் கட்டி வருகிறாராம். இதுகுறித்து, அங்கு வசிக்கும் பழங்குடியினா் முறையிட்ட போது, மண்டப உரிமையாளா் கொலை மிரட்டல் விடுத்ததுடன், குடிசைகளை அப்புறப்படுத்திவிடுவேன் என மிரட்டல் விடுத்தாராம்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்னா். அவா்கள் கூறுகையில், இந்த தடுப்புச் சுவா் தீண்டாமைச் சுவா் போல் எழுப்பப்படுகிறது. இதனால், எங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல முடியாது. இங்கு யாராவது இறந்துவிட்டால், மயானத்துக்கு கொண்டு செல்லவும் வழியில்லை. எனவே, எங்கள் நிலையறிந்து முதல்வா் மற்றும் மாவட்ட நிா்வாகத்தினா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT