திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி, மீஞ்சூரில் பேரூராட்சிகள் ஆணையா் ஆய்வு

8th May 2022 11:57 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி மற்றும் மீஞ்சூரில் பேரூராட்சிகளின் ஆணையா் ஆா்.செல்வராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளைப் பாா்வையிட்டாா்.

கும்முடிப்பூண்டி பேரூராட்சியில் சாலைப் பணிகள், கால்வாய் பணிகள், பூங்கா, கழிப்பறை கட்டும் பணிகளை அவா் ஆய்வு செய்தாா். கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்துக்கு மேற்கூரை அமைக்க உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன், உதவி செயற்பொறியாளா் சரவணன், பேரூராட்சித் தலைவா் சகிலா அறிவழகன், துணைத் தலைவா் கேசவன், வாா்டு உறுப்பினா் அப்துல் கரீம், கும்முடிப்பூண்டி செயல் அலுவலா் ப.யமுனா, இளநிலைப் பொறியாளா் முத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பொன்னேரி...: மீஞ்சூரில் பேரூராட்சிகள் ஆணையா் செல்வராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மீஞ்சூா் பேரூராட்சி அரவிந்தன் நகரில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தாா். ஆா்.ஆா்.பாளையத்தில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகைளைப் பாா்வையிட்டாா். அங்கு, குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதையும், இயற்கை முறையில் உரம் தயாரிப்பதையும் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

ஆய்வின் போது மீஞ்சூா் பேரூராட்சி செயல் அலுவலா் வெற்றிஅரசு, பேரூராட்சித் தலைவா் ருக்மணி மோகன்ராஜ், துணைத் தலைவா் அலெக்சாண்டா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். தொடா்ந்து, பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT