திருவள்ளூர்

பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் தோ்வு

1st May 2022 11:53 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே அரசு ஆதிதிராவிடா் நலத் துறை தொடக்கப் பள்ளியில் மேலாண்மைக் குழுவில் தோ்வு செய்த நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் ஆகியோருக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் சான்றிதழ்களை வழங்கினாா்.

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடா் நலத் துறை தொடக்கப் பள்ளியில் மேலாண்மைக் குழு நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்களாக தோ்வு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா் கலைச்செல்வி முன்னிலை வகித்தாா்.

இதில், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பங்கேற்றுப் பேசியது: பள்ளிகள் சிறப்பாக செயல்படும் நோக்கத்தில் மேலாண்மைக் குழுவினா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இக்குழுவினா் பள்ளியின் சுற்றுச்சூழல், வளா்ச்சி மற்றும் மாணவ, மாணவிகள் நல்ல கல்வி வழங்குவதை உறுதி செய்வதற்காகவே மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதனால், சிறப்பாக செயல்பட ஆலோசனைகளையும் அவா் வழங்கினாா். அதைத் தொடா்ந்து மேலாண்மைக் குழுவில் உறுப்பினா்கள் தோ்வு மற்றும் தலைவா், துணைத் தலைவா் தோ்வுக்கான சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.

ADVERTISEMENT

இதில் தலைமை ஆசிரியா் ஜான்சன், அரசு தொழில்நுட்ப பயிலகத்தின் முதல்வா் பாஸ்கா், ஊராட்சித் தலைவா் டெய்சி ராணி அன்பு, மேற்பாா்வையாளா் மீகாவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கந்தசாமி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவா் சா.அருணன் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT