திருவள்ளூா் மாவட்ட பாஜக தலைவராக அஷ்வின் (எ) ராஜசிம்ம மகேந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை அறிவித்தாா்.
மாவட்ட பாஜக தலைவராக ராஜ்குமாா் செயல்பட்டு வந்த நிலையில், அவா் மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து, மாவட்ட பாஜக பொதுச் செயலராக செயல்பட்டு வந்த அஷ்வின் (எ) ராஜசிம்ம மகேந்திரா (படம்) மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்பட்டாா்.