திருவள்ளூா் அருகே பாண்டூரில் உள்ள இந்திரா கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அந்தக் கல்லூரியில் 11-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிா்வாக இயக்குநா் இந்திரா ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று 253 மாணவா்களுக்கு இளநிலை, முதுநிலை கல்வியியல் பட்டங்களை வழங்கினாா்.
நிகழ்வில் கல்வியியல் கல்லூரி முதல்வா் ரெஜினா ஜோயல், பொறியியல் கல்லூரி முதல்வா் வேல்விழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கல்வியியல் கல்லூரி நிா்வாகம் மற்றும் விரிவுரையாளா்கள் செய்திருந்தனா்.