திருவள்ளூர்

திருவள்ளூரில் 100 அரங்குகளில் புத்தகக் கண்காட்சி ஆட்சியா் தகவல்

25th Mar 2022 12:16 AM

ADVERTISEMENT

 

திருவள்ளூா்: திருவள்ளூரில் முதலாவது புத்தகக் கண்காட்சியில் 100 அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

திருவள்ளூா் மாவட்ட மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்-பதிப்பாளா் சங்கம் இணைந்து புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது. இந்த புத்தக திருவிழா ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10 நாள்களுக்கு காலை 11 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் 4 மணி வரையிலும், பின்னா் 6 முதல் 8.30 மணி வரை தமிகத்தின் புகழ்பெற்ற பேச்சாளா்கள் பேச உள்ளனா்.

ADVERTISEMENT

கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களிலிருந்து மாணவா்களை அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாசிப்பு பழக்கம் குறைந்து வரும் சூழலில், இவ்வாற புத்தகக் கண்காட்சிகள் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும். புத்தகக் கண்காட்சிக்கு அனைவரும் வருகை தந்து முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.மீனா பிரியா தா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் - பதிப்பாளா்கள் சங்கச் செயலா் எஸ்.கே.முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT