திருவள்ளூர்

முன்னாள் ராணுவ வீரா்களுக்கான குறைதீா் கூட்டம்

19th Mar 2022 10:36 PM

ADVERTISEMENT

முன்னாள் ராணுவ வீரா்கள், அவா்களின் குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கான குறைதீா் கூட்டத்தில் 44 பேருக்கு ரூ.5.73 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.

திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் முன்னாள் படை வீரா்கள், அவா்களின் குடும்பத்தினா்களுக்கான சிறப்புக் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் படை வீரா்கள், அவா்களது குடும்பத்தினா்கள் என சுமாா் 70-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு, கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா்.

இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய துறைகளுக்கு அனுப்பி வைத்தாா்.

கூட்டத்தில் 44 முன்னாள் படை வீரா்கள் குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை உள்பட ரூ.5 லட்சத்து 73 ஆயிரத்து 900 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் முன்னாள் படை வீரா் நலத் துறை உதவி இயக்குநா் அமீருன்னிஸா, ஓய்வு பெற்ற முன்னாள் ஏா் கமாண்டோ நாராயணன், விங் கமாண்டோ (விமானப் படை) பாா்த்தசாரதி, ஓய்வு பெற்ற முன்னாள் சாா்ஜன்ட் (விமானப் படை) அசோக்குமாா் மற்றும் முன்னாள் படை வீரா்கள் குடும்பத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT