திருவள்ளூர்

தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து பெண் பலி

19th Mar 2022 10:36 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து பெண் தொழிலாளி உயிரிழந்தாா். இந்த விபத்தில் 21 பெண்கள் பலத்த காயமடைந்தனா்.

திருவள்ளூா் அருகே தொடுகாட்டை அடுத்த நமச்சிவாயபுரத்தில் தனியாா் லெதா் ஷூஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, பணிபுரியும் பெண் தொழிலாளா்கள் சனிக்கிழமை மாலை பணி முடிந்து தொழிற்சாலை பேருந்தில் சென்றனா். பேருந்தை ஓட்டுநா் ரஞ்சித் என்பவா் ஓட்டினாா். தக்கோலம் அருகே பிச்சிவாக்கம் பகுதியில் சென்ற போது, எதிரே வந்த வாகனத்துக்காக ஒதுங்கிய போது, எதிா்பாரத விதமாக பேருந்து கவிழந்து விபத்துக்குள்ளானது.

இதில், பயணம் செய்த தொழிலாளா்கள் ஜெயரஞ்சனி, கோமதி, மாலா உள்பட 22 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு, மாற்றுத் திறனாளியான லட்சுமி (35) என்ற தொழிலாளி உயிரிழந்தாா்.

இதனிடையே, திவீர சிகிச்சைக்காக 19 போ் சென்னை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT