திருவள்ளூர்

மஸ்தூா் யூனியன் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

14th Mar 2022 10:50 PM

ADVERTISEMENT

திருவள்ளூரில் தெற்கு ரயில்வே மஸ்தூா் யூனியன் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ரயில் நிலையத்தில் உள்ள தெற்கு ரயில்வே முதன்மை பகுதி இரும்புப் பாதை பொறியாளா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 10 பெண்கள் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT