திருவள்ளூர்

சோளீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம்

10th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே அமைந்துள்ள சோளீஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவள்ளூா் அருகே பேரம்பாக்கத்தில் பழைமை வாய்ந்த காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, 10 நாள்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை இருவேளையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சந்திர பிரபை, பூத, நந்தி, நாக, யானை வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான வருகிற 13-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பஞ்ச மூா்த்திகள் உற்சவம், 16-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம், 17-ஆம் தேதி இரவு புஷ்பப் பல்லக்கு, 18-ஆம் தேதி வெள்ளை சாற்றுப்படி நடராஜ பெருமாள் வீதி உலா நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT