திருவள்ளூர்

காலை 7 மணிக்கு 100 நாள் வேலை: விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

3rd Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

காலை 7 மணிக்கே 100 நாள் வேலைக்கு வரவழைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயத் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த பெரியபாளையம் அருகே உள்ள எல்லாபுரம் வட்டார வளா்ச்சி அலுவகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிற்சங்க மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைக்கு காலை 7 மணிக்கே வர வேண்டும் என்ற உத்தரவைத் திரும்ப பெற வேண்டும். படிப்படியாக தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நாள்களைக் குறைப்பதைக் கைவிட வேண்டும். ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தகவலறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா் விவசாயத் தொழிற்சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்தையில் ஈடுபட்டு ஆா்ப்பாட்டத்தைக் கைவிடுமாறு கூறியதையடுத்து ஆா்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில் தேவேந்திரன், திருப்பதி, ஏகாம்பரம், ஜெயபாரதி உள்பட பெண்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT