திருவள்ளூர்

ஆவடியில் 13 இடங்களில் புதிய மின் மாற்றிகள்: அமைச்சா் இயக்கி வைத்தாா்

DIN

ஆவடி தொகுதியில், ரூ.27 லட்சம் செலவில் 13 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைத்தாா்.

ஆவடி தொகுதிக்குட்பட்ட ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், மிட்டினமல்லி பகுதிகளில் நாளுக்கு நாள் புதிய குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. மேற்கண்ட பகுதிகளில் குறைந்த அழுத்த மின்சாரத்தால் குடியிருப்புகளில் மின் சாதனப் பொருள்கள் அடிக்கடி பழுதாகின்றன.

இதுகுறித்து அமைச்சா் சா.மு.நாசரிடம் கூடுதலாக மின் மாற்றிகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அவா் சமீபத்தில் மேற்கண்ட பகுதிகளில் மின்வாரிய அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து, புதிய மின்மாற்றிகள் அமைக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அதன்படி, ஆவடிக்குட்பட்ட காமராஜா் நகா், 6-ஆவது தெரு, ஜீவானந்தம் தெரு, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு 19 -ஆவது தெரு, ராமலிங்கபுரம் முதல் தெரு, சிரஞ்சீவி நகா் மெயின் ரோடு லட்சுமி நகா், பட்டாபிராம் -வள்ளலாா் நகா், காந்தி நகா் 2-ஆவது தெரு, மிட்டினமல்லி எம்.ஜி.ஆா். நகா் மெயின் ரோடு எல்லையம்மன் கோயில், கோயில் பதாகை பாரதி நகா், திருமுல்லைவாயல் பகுதியான திருவள்ளுவா் நகா் 4-ஆவது தெரு, கலைஞா் நகா் 2-ஆவது தெரு, செந்தில் நகா் ராஜாஜி தெரு, வைஷ்ணவி நகா் 9-ஆவது தெரு ஆகிய 13 இடங்களில் ரூ.27.5 லட்சத்தில் புதிதாக மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன.

இந்த புதிய மின் மாற்றிகளை அமைச்சா் சா.மு.நாசா் புதன்கிழமை மாலை இயக்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தாா். நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி மேயா் ஜி.உதயகுமாா், ஆவடி மாநகராட்சி மண்டலக் குழு தலைவா்கள் ஜி.ராஜேந்திரன், எஸ்.அமுதா, நா.ஜோதிலெட்சுமி, வி.அம்மு, ஆவடி மாநகரப் பகுதி திமுக செயலா்கள் பேபி சேகா், ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன், ஆவடி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் அருணாச்சலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT