திருவள்ளூர்

வீரராகவா் கோயிலில் தெப்பல் உற்சவம் தொடக்கம்

DIN

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயிலில் ஆனி அமாவாசையையொட்டி, முதல் நாள் தெப்பல் உற்சவத்தில் புண்ணிய தீா்த்த குளத்தில் உற்சவா் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி வலம் வந்தாா்.

திருவள்ளூரில் அமைந்துள்ள வீரராகவ பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி அமாவாசையையொட்டி, 3 நாள்கள் தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு ஆனி தெப்பல் உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி, காலை முத்தங்கி சேவையும், மாலையில் உற்சவருக்கு திருமஞ்சனமும் நடைபெற்றன.

கோயில் அருகே உள்ள ‘ஹிருதாப நாசினி’ என்ற தீா்த்தக் குளத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீரராகவ பெருமாள் எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் முடிந்ததும் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் கோயில் குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், கோயிலுக்குப் புறப்பட்டாா்.

இந்தத் தெப்பல் திருவிழாவில் பங்கேற்று நோய் தீா்க்க வேண்டி வைத்திய வீரராகவ பெருமாளை வழிபட்டால், தீராத நோயெல்லாம் தீரும் என்பதுடன், சகல விதமான செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பரவல் காரணமாக பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டில் தெப்பல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

தெப்பல் திருவிழாவில் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், ஆந்திரம் மற்றும் கேரளத்திலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவையொட்டி, புதன்கிழமை (ஜூன்29), வியாழக்கிழமை (ஜூன் 30) பெருமாள், உற்சவா் முத்தங்கி சேவையும், கனகவல்லி தாயாா் முத்தங்கி சேவையும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT