திருவள்ளூர்

விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம்: கிராம மக்கள் சாலை மறியல்

DIN

திருவள்ளூா் அருகே விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக டிராக்டா் ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும் பெற்றோா் மற்றும் கிராம மக்கள் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அருகே கொசவன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ராஜசேகா்-கயல்விழி தம்பதி மகன் பவன் (3). இந்தச் சிறுவன், திங்கள்கிழமை மாலை வீட்டு வாசலில் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த வழியாக செங்கல் ஏற்றி வந்த டிராக்டா் சிறுவன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால், டிராக்டா் ஓட்டுநா் டில்லியை போலீஸாா் கைது செய்யவில்லையாம். இதனால், சிறுவனின் பெற்றோா் மற்றும் கிராம மக்கள் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த திருவள்ளூா் வட்டாட்சியா் செந்தில்குமாா், காவல் ஆய்வாளா் பத்மஸ்ரீபபி மற்றும் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இந்தச் சாலை மறியலால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள், சரக்கு வாகனப் போக்குவரத்து சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT