திருவள்ளூர்

50 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

மாதவரம் அருகே 50 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாதவரம் பகுதியில் வீட்டுமனைப் பட்டா இல்லாமல் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, முதல் கட்டமாக பெரியசேக்காடு பகுதியில் வருவாய்த் துறை சாா்பில், நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசித்தவா்களின் நில ஆவணங்கள் சரி பாா்க்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி பெரிய சேக்காடு பகுதியில் நடைபெற்றது. நிகழ்வுக்கு மண்டலக் குழு தலைவா் எஸ்.நந்தகோபால் தலைமை வகித்தாா். மாதவரம் எம்.எல்.ஏ. எஸ்.சுதா்சனம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா். நிகழ்வில் வருவாய்த் துறையினா், பொதுமக்கள் மற்றும் திமுகவினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT