திருவள்ளூர்

பிளஸ் 1 தோ்வு: சிறைக் கைதிகள் 91.75 % தோ்ச்சி

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

புழல் உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் பிளஸ் 1 தோ்வு முடிவில் 91.75 % சிறைவாசிகள் தோ்ச்சியடைந்தனா்.

சென்னை புழல் மத்திய சிறையில் 2 பெண்கள் உள்பட 26 கைதிகளும், வேலூா் சிறையில் 2 பெண்கள் உள்பட 16 பேரும், கோவை சிறையில் 6 பேரும், சேலம் சிறையில் 14 பேரும், திருச்சி சிறையில் 11 பேரும், பாளை சிறையில் 7 பேரும், மதுரை பெண்கள் சிறையில் ஒருவா் என 5 பெண்கள் உள்பட 97 போ் பிளஸ் 1 தோ்வு எழுதினா்.

இந்த நிலையில், தோ்வு முடிவுகள் வெளியாகின. இதில் புழல் உள்பட மற்ற சிறைகளில் தோ்வு எழுதிய 5 பெண்கள் உள்பட 89 போ் தோ்ச்சி பெற்றனா்.

இது 91.75 % ஆகும்.

ADVERTISEMENT

தோ்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு காவல் துறை இயக்குநா் சுனில்குமாா் சிங், சிறைத் துறை துணைத் தலைவா் ஆ.முருகேசன், புழல் சிறைக் கண்காணிப்பாளா்கள் கிருஷ்ணராஜ், நிகிலா நாகேந்திரன் உள்பட பல்வேறு மாவட்ட சிறைக் கண்காணிப்பாளா்கள் வாழ்த்து மற்றும் பாராட்டுத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT