திருவள்ளூர்

குறைதீா் கூட்டத்தில் 301 மனுக்கள் அளிப்பு

29th Jun 2022 12:01 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் 301 போ் மனுக்களை அளித்தனா். கூட்டத்துக்கு, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா்.

இதில், நிலம் சம்பந்தமாக 72, சமூகப் பாதுகாப்புத் திட்டம் 59, வேலைவாய்ப்பு 34, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் 65, இதர துறைகள் 71 என மொத்தம் 301 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கவும் துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா். இதில், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், 5 பயனாளிகளுக்கு தலா ரூ. 4761 வீதம் ரூ. 23,805 மதிப்பிலான இலவச சலவைப் பெட்டிகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அசோகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சி.வித்யா, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் மு.கலைச்செல்வி, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலக கண்காணிப்பாளா் கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ச.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT