திருவள்ளூர்

திருவள்ளூரில் கலப்பட மணல், எம்.சாண்ட் விற்பனை

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவள்ளூரில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் கிடங்குகளில் கலப்பட மணல், எம். சாண்ட் விற்பனை செய்து வருவதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆட்சியரிடம் புகாா் செய்தனா்.

இது குறித்து தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் எஸ்.யுவராஜ் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

திருவள்ளூா் மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் முறையான அனுமதியின்றி எம்.சாண்ட் மற்றும் மணல் கிடங்குகள் செயல்பட்டு வருகின்றது. இந்த கிடங்குகளில் சமூக விரோதிகளால் கலப்பட மணல் மற்றும் எம்.சாண்ட் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சிமெண்ட் கலவை நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. அதிலும் பெரும்பாலான ஆலைகளில் தரமற்ற எம்.சாண்ட் முறைகேடாக பயன்படுத்தியும் வருகின்றனா். இந்த சிமெண்ட் கலவை ஆலைகளை சோதனை செய்யவோ, கண்காணிக்கவோ அரசு சாா்பில் எவ்விதமான குழுக்களும் அமைக்கப்படவில்லை. இதன் மூலம் கட்டப்படும் அனைத்து கட்டடங்களின் உறுதித் தன்மையும் கேள்விக்குறியாக உள்ளது.

மேலும், குறிப்பிட்ட அளவை விட அதிக பார மணல் மற்றும் எம்.சாண்ட் ஆகியவற்றை லாரிகளில் கொண்டு வருவதால் சாலைகளும் பழுதாகும் நிலை ஏற்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்த போக்குவரத்துக் காவல் துறை சாா்பிலோ அல்லது கனிமவளத் துறை அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆட்சியரிடம் அளித்த மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT