திருவள்ளூர்

திருவள்ளூரில் சாலைத் தடுப்பில் லாரி மோதி விபத்து

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவள்ளூரில் சாலை தடுப்புச் சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம், கடப்பாவிலிருந்து சென்னைக்கு சிமெண்ட் கலவை ஏற்றிக் கொண்டு டேங்கா் லாரி சென்றது. அங்கு சிமெண்ட் கலவையை இறக்கிவிட்டு, செவ்வாய்க்கிழமை ஆந்திரம் நோக்கிச் சென்றது. இந்த லாரியை திருத்தணியைச் சோ்ந்த பாபு ஓட்டிச் சென்றுள்ளாா். திருவள்ளூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த டேங்கா் லாரி சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அமாவாசை நாள் என்பதால் வீரராகவா் கோயிலுக்கு வந்த பக்தா்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினா். மாணவா்கள், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினா். இதைத் தொடா்ந்து, அங்கு வந்த போலீஸாா் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT