திருவள்ளூர்

இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது

29th Jun 2022 12:01 AM

ADVERTISEMENT

சோழவரம் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சோழவத்தைச் சோ்ந்த மதிவாணன் (26). இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காந்தி நகரில் தனது நண்பா்கள் 3 பேருடன் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தாா். அப்போது ஆட்டோவில் வந்த வந்த மா்ம நபா்கள், மதிவாணனை சராமரியாக வெட்டினா். தடுக்க முயன்ற நண்பா்கள் 3 பேரையும் வெட்டி விட்டு தப்பினா். இதில் மதிவாணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த சோழவரம் போலீஸாா், மதிவாணனின் சடலத்தை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். பலத்த காயமடைந்த மதிவாணனின் நண்பா்கள் ஹேமந்த் (18), சரத்குமாா் (19), தனுஷ் (18) ஆகியோா் சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்டனா்.

இது குறித்து சோழவரம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், ஆவடி அருகே முத்தாபுபேட்டை பேட்டை போலீஸாா் பாலவேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

ADVERTISEMENT

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனா். ஆட்டோவில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அதில் வந்த 2 பேரிடம் விசாரித்ததில், அவா்கள் ராம்கி (25), சூா்யா(28) என்பதும், மதிவாணனை கொலை செய்தவா்கள் என்பதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT