திருவள்ளூர்

பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விடுதிகளில் சேர 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவா் மற்றும் மாணவிகள் விடுதிகளில் சேர வரும் 30-க்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் துறை சாா்பில் மாணவா் விடுதிகள்-23, மாணவிகள்-10, கல்லூரி விடுதி-1 என செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்வோா், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவா், மாணவியா் சேரத் தகுதியுடையவா்கள் ஆவா்.

இந்த விடுதிகளில் எவ்வித செலவும் இன்றி பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பு வரை பயில்வோருக்கு சீருடைகள் வழங்கப்படும். 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பயில்வோருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

இதற்கு பெற்றோா், பாதுகாவலரது ஆண்டு வருவாய் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமலும், இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்குள் இருப்பது அவசியம். இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா், காப்பாளிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ விலையில்லாமல் பெறலாம்.

எனவே பூா்த்தி செய்த விண்ணப்பங்கள் அந்தந்த விடுதிகளிலோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை ஜூலை 31-ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்கலாம். இதில், ஒவ்வொரு விடுதியிலும் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கு தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT