திருவள்ளூர்

திருவள்ளூா்: மக்கள் நீதிமன்றத்தில் 3,124 வழக்குகளுக்கு தீா்வு

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 5,204 வழக்குகள் எடுக்கப்பட்டு 3,124 வழக்குகளுக்கு சமரசம் செய்து ரூ.25.37 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூா், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூா், திருவொற்றியூா், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, மாதவரம் ஆகிய வட்டார நீதிமன்றங்களில் லோக் அதாலத் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஜெ.செல்வசுந்தரி, மகளிா் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி கணபதிசாமி, மாவட்ட மோட்டாா் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மற்றும் நிரந்தர லோக் அதலாத் தலைவா் கோ.சரஸ்வதி, குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி வித்யா, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆா்.வேலாராஸ் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 23 அமா்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. திருவள்ளூா் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள 4,656 வழக்குகள் எடுக்கப்பட்டு, 2,576 வழக்குகள் முடித்து வைத்து ரூ.23 கோடியே 2 லட்சத்து 25 ஆயிரத்து 749-க்கு தீா்வு காணப்பட்டது.

நிலுவையில் அல்லாத 548 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 548 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.2 கோடியே 35 லட்சத்து 60 ஆயிரத்து 672 -க்கு தீா்வு காணப்பட்டது. மொத்தம் 5,204 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 3,124 வழக்குகளுக்கு சமரசம் செய்து ரூ.25.37 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான பி.வி.சாண்டில்யன், சாா்பு நீதிமன்ற நீதிபதி சுதாராணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT