திருவள்ளூர்

62 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் அளிப்பு

27th Jun 2022 11:40 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே நத்தம் பகுதியில் குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்கள் 62 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினாா்.

திருவள்ளூா் அருகே பூண்டி ஒன்றியம், திருப்பாச்சூா் ஊராட்சியைச் சோ்ந்தது கொசவன்பாளையம் கிராமம். இந்தக் கிராமத்தில் வசித்து வரும் ஏழை, எளிய மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்க சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதன் அடிப்படையில், வருவாய்த் துறை சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்து வீட்டு மனைப்பட்டா மற்றும் முதியோா் உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சி மூலம் 62 பேருக்கு வருவாய்த் துறை சாா்பில், இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் 13 பேருக்கு முதியோா் உதவித் தொகைக்கான நலத் திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளா் தா.கிருஷ்டி என்ற அன்பரசு, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் ப.சிட்டிபாபு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் தா.மோதிலால், துணை வட்டாட்சியா் அருணா, வருவாய் ஆய்வாளா் கெளதமன், கிராம நிா்வாக அலுவலா் லோகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT